fbpx

வேங்கை வயல் சம்பவம்….! நீதிபதி சத்யநாராயணன் நேரில் ஆய்வு….!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றன. இத்தகைய நிலையில், இந்த சம்பவத்தில் விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் அவர்களை ஒரு நபர் ஆணையமாக உயர் நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் இன்று முற்பகல் வேங்கை வயல் கிராமத்திற்கு நேரில் சென்று முதன்முறையாக குடியரசு தொட்டியை பார்வையிட்டார். அதன் பிறகு அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

இந்த விசாரணை முடிவுற்ற பின்னர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல்துறை கண்காணிப்பாளர் வந்ததா, பாண்டே மற்றும் சிபிசிஐடி காவல்துறையினர் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று சொல்லப்படுகிறது.

Next Post

திருச்சி துறையூர் அருகே இரு வேறு இடங்களில் 2️ படுகொலை….! டிஐஜி நேரில் ஆய்வு நடந்தது என்ன….?

Sat May 6 , 2023
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொத்தம்பட்டியில் குண்டாற்றுப் பாலத்தின் கீழ் நேற்று ஒருவர் முகம் மற்றும் தலையில் வளர்த்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், கிடந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த துறையூர் காவல்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர் அதன் பிறகு இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அதேபோல கொத்தம்பட்டியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன்னர் சங்கம் பட்டி கிராமத்தில் கண்ணனூர் பாளையம் ஏரிக்கு […]

You May Like