சமீபத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழி சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில், திமுகவின் தேசிய அரசியல் மதமாக நான் மட்டுமல்ல பலர் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் திமுகவின் அடிப்படை கொள்கைகள் எதையும் நான் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்று கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் கட்சியின் சார்பில் இருந்து அனைத்து விஷயங்களையும் எந்தவிதமான சமரசமும் இன்றி தொடர்ந்து, உரையாற்றிக் கொண்டு தான் உள்ளேன் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
அதோடு தங்களை அமைச்சரவையில் எப்போது பார்க்கலாம் என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு அமைச்சரவையில் ஒரு அங்கமாக செயல்படுவது என்பது கட்சி எடுக்கும் முடிவுதான். கட்சியில் எந்த பொறுப்பு கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். அதோடு யார் எந்த இடத்தில் பணி புரிய வேண்டும் கட்சி தான் முடிவு செய்யும் என கூறியுள்ளார் கனிமொழி.