fbpx

முதல்வரின் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்…..! கர்நாடகாவில் பரபரப்பு…..!

கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் மே மாதம் 10 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கின்ற சூழ்நிலையில், பணப்பட்டு வாடா மற்றும் தேர்தல் முறைகேடுகள் உள்ளிட்டவற்றை தடுப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பை தீவிர படுத்தியிருக்கிறார்கள்.

இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களை விடவும் தற்போது அதிக அளவில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் பெங்களூருவில் தொட்டபல்லாப்புராவில் இருக்கின்ற சுப்பிரமணியர் ஆலயத்திற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் திடீரென்று அவருடைய காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தியதால் பரபரப்பு உண்டானது.

அதன் பிறகு காரை சோதனையை செய்த பறக்கும் படை அதிகாரிகள் ஆட்சேபனைக்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படாததால் முதலமைச்சர் கார் விடுவிக்கப்பட்டது. இத்தகைய நிலையில், தேர்தல் பறக்கும் படையால் முதல்வரின் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Next Post

தமிழகத்தில் மேலும் 8 புதிய மாவட்டங்கள்..? சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...

Sat Apr 1 , 2023
தமிழகத்தில் 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசித்து வருவதாக பேரவையில் அமைச்சர் K.K.S.S.R ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.. இன்று தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரியதற்கு அமைச்சர் ராமச்சந்திரன் பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர், “ தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்க எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளனர்.. இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதிநிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை […]

You May Like