கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அங்கே இருந்த காவலாளி மற்றும் கணினி ஆப்ரேட்டர் உள்ளிட்டோரை கொலை செய்துவிட்டு பல முக்கிய ஆவணங்களை ஒரு கும்பல் திருடி சென்றது.
இந்த வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக தமிழக அரசு இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இந்த வழக்கை வைத்து அவரை எப்படியாவது இதில் சிக்க வைக்க முடியுமா? என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் போன்ற 10 பேர் கைது செய்யப்பட்டு அதன் பிறகு ஜாமினில் விடுவிக்க விட்டுள்ளனர்.
இந்த வழக்கு குறித்து 300க்கும் அதிகமானவரிடம் விசாரணை நடத்தப்பட்டு 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை மற்றும் கொலை சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய முரளி ரம்பாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது இத்தகைய நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா முன்னாள் சட்டசபை உறுப்பினர் 650 உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அத்துடன் இந்த வழக்கில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த அன்றைய தினம் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஜோதிடர் ஒருவரை சந்தித்ததாக சொல்லப்படுவதால் அந்த ஜோதிடரிடமும் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. சிபிசிஐடி மே மாதம் முதல் வாரத்தில் சசிகலா உள்ளிட்ட எல்லோருக்கும் சமன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது.