திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகேயுள்ள ஆத்துப்பட்டி பகுதியைச் சோந்தவா் கலைச்செல்வன். இவரது மகன் அலெக்சாண்டா்( 30). வடமதுரை அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி பகுதியை யைச் சோந்தவா் சாமிவேல். இவரது மகன் ஜோதிமுருகன் (35). இவா்கள் இருவரும் வழக்கறிஞா்களாக பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இவர்கள் இவரும் வழக்கறிஞா் பட்டம் பெறாமல் முறைகேடாக வழக்கறிஞா் தொழிலில் ஈடுபட்டு வருவதாக திண்டுக்கல் வழக்கறிஞா்கள் சங்கத்தின் இணைச் செயலா் பாண்டியராஜன் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இதற்கிடையே இருவரையும் கைது செய்யக் கோரி வ திண்டுக்கல் வடக்கு வழக்கறிஞா்கள் சங்கத்தினா், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், அலெக்சாண்டா் மற்றும் ஜோதிமுருகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனா். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞா்கள் கலைந்து சென்றனா்.