தமிழக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் ஆடியோ சர்ச்சை ஒன்றில் சிக்கினார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் மீது அதிருப்தி அடைந்தனர். மேலும் பலர் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதன் காரணமாக திமுக தலைமை அவர் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக முதல்வரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் மீது எழுந்த சர்ச்சைக்கு அவரே பதிலளித்து விட்டார் என்று ஒற்றை வார்த்தையில் முடித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனாலும் மனதளவில் திமுக தலைமை பி டி ஆர் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. முதலில் வெளியான பொதுக்கூட்டங்களில் பேசுபவர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெற்றிருந்த சூழ்நிலையில் தற்போது திமுக தலைமை வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் அவருடைய பெயர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆடியோ சர்ச்சைக்கு பிறகு திமுக தலைமை அவர் மீது அதற்கு இருப்பதற்கு இதுவே சாட்சி என்று தெரிவிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.