fbpx

லாரி கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து; பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த பள்ளி குழந்தைகள் உட்பட 10 பேர் பலி..!

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் இருக்கும் பிகசி நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் நேற்று வகுப்பை முடித்துவிட்டு பள்ளிகூடத்தை விட்டு வெளியே வந்த குழந்தைகள் 20 பேர் வீட்டிற்கு செல்வதற்காக அருகே இருக்கும் பஸ் ஸ்டாப் சென்றுள்ளனர். பஸ்சுக்காக குழந்தைகள் காத்திருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக பள்ளிக் குழந்தைகள் நின்றுகொண்டிருந்த பஸ் நிறுத்தம் மீது வேகமாக மோதியது. அதன் பிறகு அங்கிருந்த மின் கம்பம் மீது லாரி மோதியது. இதில், மின் கம்பம் சரிந்து சாலையில் வந்து கொண்டிருந்த வேன் மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் பள்ளிக் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மின் கம்பம் விழுந்ததில் வேன் ஓட்டுனரும் உயிரிழந்தார்.

மேலும் அங்கு இருந்த பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த பள்ளிக் குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்தை உண்டாக்கிய லாரி ஓட்டுனரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.43 லட்சம் கோடி..! மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு..!

Thu Sep 1 , 2022
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 19% அதிகரித்து ரூ.8,386 கோடியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி […]
கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.43 லட்சம் கோடி..! மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு..!

You May Like