சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற ரவ்னி கிராமத்தைச் சேர்ந்த நபர் சங்கர் ராம் இவருடைய மனைவி ஆஷா பாய் இந்த நிலையில் சங்கர் ராம் மது போதைக்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற கடந்த 17ஆம் தேதி இரவு ஷங்கர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என தன்னுடைய மனைவி ஆஷாபாயிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் இதற்கு ஆஷா சம்மதிக்கவில்லை இந்த நிலையில், அவரை வற்புறுத்தி உடலுறவில் ஈடுபட முயற்சி செய்து இருக்கிறார் சங்கர்ராம். ஆகவே தன்னுடைய கணவனிடம் இருந்து தப்பிக்க நினைத்து ஆஷாபாய் அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். ஷங்கரும் உடனடியாக மனைவியை காப்பாற்ற அந்த கிணற்றில் குதித்து அவரை மேலே தூக்கி வந்துள்ளார்.
ஆஷாவை கிணற்றிலிருந்து மீட்டு வந்த பின்னரும் கூட அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் இருந்த ஷங்கர் மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். அதோடு மனைவியின் பிறப்புறுப்பில் மோசமாக தாக்கி அவரை அடித்து கொலை செய்து விட்டார் சங்கர்.
நல்லிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த தகராறில் ஆஷாபாய் கொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான தகவல் அறிந்து சங்கரின் வீட்டிற்கு வந்த காவல் துறையினர், அவரை கைது செய்தனர். அதோடு உயிரிழந்த ஆஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மனைவியை கொலை செய்த சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.