சென்ற சில மாதங்களாக குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆகவே அறிவியில் நீர் வற்றி போய் பாறைகள் மட்டுமே காணப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் கவலை அடைந்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் தற்சமயம் தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆகவே குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக, குற்றாலத்தில் குளிப்பதற்கு பொதுமக்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது.
பொதுவாக குற்றால சீசன் மே மாத இறுதியில் ஆரம்பித்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக, மே மாத தொடக்கத்திலேயே குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. ஆகவே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள்.
அதோடு கடந்த சில தினங்களாக குற்றாலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஆகவே குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில்தான் குற்றாலம், மெயின் அருவி மற்றும் ஐந்தருவில் மிதமான அளவில் நீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அருவிகளின் குளிப்பதற்கு மறுபடியும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, அங்கே சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.