மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில் அங்கே கலவரம் வெடித்தது. ஆகவே கலவரம் செய்பவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் மெய்டீஸ் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் அதற்கு பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதன் காரணமாக, கடந்த சில மாதங்களாகவே இரு பிரிவினருக்கிடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இத்தகைய நிலையில், மணிப்பூர் பட்டியலின மாணவ அமைப்பினர் நடத்திய ஒற்றுமை பேரணியில் வெடித்த கலவரம் ஒட்டுமொத்த மணிப்பூரையும் தீக்கிரையாக்கி இருக்கிறது. இது பிரிவினர்களுக்கு இடையே மோதல் வெடித்த நிலையில், வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர்.
அந்த மாநிலத்தில் நடைபெற்ற வரும் வன்முறையின் காரணமாக, அந்த மாநிலத்தின் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்திருக்கிறது. கலவரம் நடந்து வரும் மாவட்டங்களில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டதுடன் 5 தினங்களாக இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.