fbpx

திருப்பதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட முன்னாள் தலைமை நீதிபதி ரமணா……!

மிகவும் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாபெரும் தூய்மை பணி இயக்கத்தை கோவில் தேவஸ்தானம் நேற்றைய தினம் நடத்தியது. சுமார் 1000 பேர் பங்கேற்ற இந்த இயக்கத்தை முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராமன ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் E.O.தர்மா ரெட்டி போன்ற முன்னணி பிரமுகர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

ஏழு மலைகளை உடைய திருப்பதியின் மலை அடிவாரத்தை அலிபிரி என்று அழைக்கிறார்கள். திருமலைக்கு நடைபாதை வழியாக ஏறி வரும் பக்தர்கள் அங்கிருந்து நான் நடக்க ஆரம்பிப்பார்கள். இந்த நிலையில், ஏழு மலைகளிலும் பக்தர்கள் நடந்து செல்லும் போது அவர்கள் மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் குவிந்து மலையை அசுத்தப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தான் விழிப்புணர்வு இயக்கமாக இந்த தூய்மை பணியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டிருக்கிறது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தொடங்கி அனைத்து முன்னணி பிரமுகர்களும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த 700 ஊழியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த 200 ஊழியர்கள் போன்ற சுமார் 1000 நபர்கள் பல குழுக்களாக பிரிந்து, இந்த தூய்மை பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த தூய்மை பணியின் போது 1600 பிளாஸ்டிக் பை குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதாக தேவஸ்தான நிர்வாகம் கூறியுள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த தூய்மை பணியானது, மாலை வரையில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

Next Post

பன்னீர்செல்வத்தை சந்தித்தது ஏன்……? மர்மத்தை உடைத்தார் டிடிவி தினகரன்…..!

Sun May 14 , 2023
சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் சந்திப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு தொடர்பாகவும் எதிர்கால அரசியல் திட்டம் தொடர்பாகவும் டிடிவி தினகரன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது பன்னீர்செல்வம் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் அதிமுகவிலிருந்து நீக்கபட்டவுடன் சையது கான் என்ற எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் நாங்கள் […]
டிடிவி தினகரனுடன் கைகோர்த்த ஓபிஎஸ்..!! அடுத்த டார்கெட் சசிகலா..!! கலக்கத்தில் எடப்பாடி..!!

You May Like