fbpx

தமிழகத்தில் மே மாதம் 1ம் தேதி……! குடிமகன்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு…..!

டாஸ்மாக் மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் உள்ளிட்ட தினங்களில் தமிழ்நாடு முழுவதும் மூடப்படுவது வழக்கம். அந்த விதத்தில், மே தினத்தை முன்னிட்டு வரும் திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.

இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வெளியிடுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசும் அரசு சார்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிடும்.

அந்த வகையில், தலைநகர் சென்னையில் மே மாதம் 1ம் தேதி அனைத்து டாஸ்மாக் மற்றும் அனைத்து மதுபான கூடங்களும் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதை மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருக்கிறார். அதேபோல திருவண்ணாமலையிலும் அனைத்து டாஸ்மாக்குகளும் மற்றும் பார்களும் மூடப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்திருக்கிறார்.

Next Post

தமிழகத்தில் மறுபடியும் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது…..? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய ஆலோசனை…..!

Fri Apr 28 , 2023
தமிழகத்தின் 10 11 12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, 9 முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வந்தனர். அதேபோல எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்தது. 10 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை ஆரம்பமாகியுள்ளது. அதே நேரம் மூன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை […]
”கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர்”..! - அமைச்சர் அன்பில் மகேஷ்

You May Like