சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டசபை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்து வருகின்றார் ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு சென்று அங்கு நடைபெற்ற கபடி உள்ளிட்ட போட்டிகளை பார்வையிட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நாளை காலை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார். பிரதமரை சந்திப்பதற்கு அவருக்கு நாளை காலை 10:30 மணி அளவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது 11 மணி வரையில் அவர் பிரதமருடன் உரையாடுவார் என்று கூறப்படுகிறது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் கிரிராஜ் சிங் உள்ளிட்டோரையும் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து தன்னுடைய கோரிக்கை மனுவை வழங்க உள்ளார் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.