விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மாப்பிள்ளை போன்ற தொடர்களில் நடித்து அதன் பிறகு பல தொடர்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் மிர்ச்சி செந்தில்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடர் முடிவடைந்த பிறகு அவர் வேறு எந்த புது தொடரிலும் நடிக்காமல் இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் தற்சமயம் அவரது அடுத்த தொடர் தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது.
தற்சமயம் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புது தொடரில் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது அவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடிக்க உள்ளாராம். அவருக்கு தங்கையாக பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் ரித்திகா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அண்ணா என்று இந்த தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளதால் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி தான் கதைக்களம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.