fbpx

மூட நம்பிக்கைகளை பேசி மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம் மோடி ஜி… காங்கிரஸ் தலைவர் ராகுல்..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம் பானிட்டில் 900 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை எத்தனால் தயாரிப்பு ஆலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,

விரக்தியின் உச்சத்தில் இருக்கும் சிலர் (காங்கிரஸ்), கடந்த ஐந்தாம் தேதி அன்று கருப்பு உடை அணிந்து மந்திர தந்திர வித்தைகளுக்கு முயன்றனர். கருப்பு உடை உடுத்துவதின் மூலம் அவநம்பிக்கை, விரக்தியில் இருந்து விடுபடலாம் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் எந்த தந்திரம் செய்தாலும்  மக்களின் நம்பிக்கையை அவர்கள் திரும்ப பெற முயடிாது. மந்திர தந்திரங்களால் அவர்களது துயரமான நாட்கள் முடிவுக்கு வரப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். பிரதமரின் இந்த பேச்சுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில், உங்கள் கருப்பு செயல்களை மறைக்கவும் பில்லி சூனியம் போன்ற மூட நம்பிக்கைகளை பேசி நாட்டை தவறாக வழி நடத்துவதை நிறுத்துங்கள் பிரதமர் மோடி ஜி. மேலும் மக்கள் பிரச்சினைகளுக்கு நீங்கள் பதில் கூற வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.

Rupa

Next Post

கமல்ஹாசனுடன் மல்லுக்கட்டும் மன்சூர் அலிகான்..! முதல்முறையாக களமிறக்கும் லோகேஷ்..!

Fri Aug 12 , 2022
விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் 1990 காலகட்டத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டியவர் மன்சூர் அலிகான். மிரட்டும் முகபாவனை, அசாத்தியமான வசன உச்சரிப்பு, வித்தியாசமான நடிப்பு போன்றவற்றால் தமிழ் சினிமாவில் டிமாண்டான வில்லனாக வலம் வந்தார். மிகப்பெரிய கதாநாயகர்களுடன் சினிமாவில் மல்லுக்கட்டிய மன்சூர் அலிகானுக்கு, கமல்ஹாசனுடன் ஒரு […]
கமல்ஹாசனுடன் மல்லுக்கட்டும் மன்சூர் அலிகான்..! முதல்முறையாக களமிறக்கும் லோகேஷ்..!

You May Like