fbpx

புதிதாக உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை பார்வையிட்ட மோகன்லால்… முகநூல் பக்கத்தில் வெற்றியடைய வாழ்த்து..!

கொச்சி கப்பல் கட்டும் தளம், கடற்படைக்காக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டி முடித்துள்ளது. முழுவதுமாக உள்நாட்டில் டிசைன் செய்து அமைத்துள்ள இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கி இருக்கிறது. இந்த கப்பல் அடுத்த மாதம் முறைப்படி நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டு, இந்திய கடற்படையில் இணைக்கப்படும்.

அப்போது இந்த கப்பல், ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற பெயருடன் இயங்கும். இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை நடிகர் மோகன்லால் நேரில் சென்று பார்வையிட்டார். கேரளாவில் இருக்கும் கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு வந்த மோகன்லால், கடற்படை வீரர்கள் துனையுடன் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை சுற்றி பார்த்தார்.

அதன் பிறகு கடற்படை வீரர்கள் மற்றும் அங்கு பணியாற்றி கொண்டிருந்த மாலுமிகள் மற்றும் பணியாளர்களுடன் நடிகர் மோகன்லால் கலந்துரையாடினார். அதன் பிறகு, இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கப்பல் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று தனது முகநூல் பக்கத்தில் நடிகர் மோகன்லால் பதிவிட்டுள்ளார்.

Baskar

Next Post

புதுக்கோட்டை ஆடிப்பூர திருவிழா தேர் விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்..!

Sun Aug 7 , 2022
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற குடவரை கோவில்களில் ஒன்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேசுவரர் கோவிலாகும். தொண்டைமான் மன்னர் காலத்தில் அவர்களது குல தெய்வமாக இத்திருக் கோவில் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து வெவ்வேறு அலங்காரத்தில் தினமும் சாமி ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேரோட்டம் கடந்த 31-ஆம் தேதி நடந்தது. […]

You May Like