fbpx

பத்துக்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது; மேலும் 130 வங்கி கணக்குகள் முடக்கம்… குமரியில் அதிரடி..!

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக தற்பொழுது கஞ்சா குமரி மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரயில்வே காவல்துறையினரும் அதிரடி சோதனை செய்து வருகிறார்கள். கடந்த வாரம் ரெயிலில் கேட்பாராற்று கிடந்த 6 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான காவல்துறையினர் கண்ணாங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பைக்கில் இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். காவல்துறையினர் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த ஷாபான் அதீல் (23) என்பது தெரிய வந்தது. மேலும் அவரது பைக்கை சோதனை செய்தனர். அப்போது அந்த பைக்கில் பிளாஸ்டிக் கவரில் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் ஷாபான் அதீலை கைது செய்தனர். மேலும் அவரது வங்கி கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 130 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 10-க்கும் அதிகமான கஞ்சா வியாபாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Rupa

Next Post

தாய் வேறொருவருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த மகன்; தூக்கு போட்டு தற்கொலை..!

Wed Aug 17 , 2022
ஆந்திர மாநிலத்தில் ஏலுர் மாவட்டம் பீமடோலு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்.  கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் தந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டார். அதனால் அவரின் அம்மாவுடன் வசித்து வந்தார். கொத்தனார் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் வெங்கட்டின் தாய்க்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது தாயின் நடத்தை பற்றி அக்கம் பக்கத்தினர் மூலமாக வெங்கட்டுக்கு தெரிய வந்தது. எனவே தனது […]

You May Like