fbpx

மகளின் காதலுக்காக தாய் செய்த கொடூர செயல்… பகீர் சம்பவம்..!

கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் சண்முகம் (50), இவரது மனைவி சசிகலா(48). இவர்களுக்கு இரண்டு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மூவரும் சேலத்தில் இருக்கும் அவர்களது பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சண்முகத்திற்கும் சசிகலாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சசிகலாவை வீட்டிற்கு வெளியே வைத்து பூட்டி விட்டு சண்முகம் தூங்கியுள்ளார். வீட்டிற்கு வெளியே அவர்களது மினி வேன் ஒன்றில் சசிக்கலா தூங்கியுள்ளார்.

இருந்தாலும் சண்முகத்தின் மீது உள்ள கோபத்தினால் தனது மகளின் காதலனின் உதவியோடு பின் வாசல் வழியாக இருவரும் உள்ளே சென்று சண்முகத்தை வெட்டி கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல வெளியில் உள்ள மினி வேனில் படுத்து தூங்கியுள்ளனர். காலையில் விடிந்தவுடன் வீட்டின் கதவை கணவர் திறக்கவில்லை என்றும் உள்ளே கணவன் வெட்டு காயங்களுடன் உள்ளதாகவும் காவல் நிலையத்திற்கு அவரே தகவல் அளித்தார். காவல்துறையினர் அங்கு வந்து பார்த்த போது சண்முகம் உடல் முழுவதும் வெட்டு காயங்களோடு இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு சசிகலா மீது சந்தேகம் ஏற்பட்டது. காவல்துறையினரின் விசாரணையில் சசிகலா நடந்தவற்றை கூறியுள்ளார்.

மேலும் சசிகலா காவல்துறையினரிடம் அளித்த வாக்கு மூலத்தில் சண்முகத்திற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் வாங்கும் சம்பளத்தில் அந்த பெண்ணிற்கு அதிக செலவுகளை செய்வதால் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்ததாகவும், மேலும் தனது மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். விசாரணைகளின் முடிவில் சசிகலாவும் அவரது மகளின் காதலன் தமிழ்வாணன்(22) என்பவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Rupa

Next Post

’காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வருவது அக்கட்சியை விட பாஜகவுக்கு நல்லது’..! அண்ணாமலை

Wed Sep 7 , 2022
நாடாளுமன்றத் தேர்தலில் 450 உறுப்பினர்களை பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராகுல் காந்தி பாத யாத்திரை செல்வதன் நோக்கம் இந்தியாவை ஒற்றுமையாக இணைப்பதற்காக என்று கூறுகிறார். மோடியின் ஆட்சியில் இந்தியா முழுமையாக இணைந்துள்ளது என்பதனையும், நாடு பெற்றுள்ள வளர்ச்சியினையும் யாத்திரை செல்லும்போது அவர் நன்கு அறிவார். காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி […]

You May Like