fbpx

மும்பை; மீண்டும் போலீஸ் வாட்ஸ் அப்பில் வந்த எச்சரிக்கை… தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சுறுத்தல்..!

மும்பையில், தாக்குதல் நடத்தப்படலாம் என மும்பை போக்குவரத்து காவல் துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு, வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது. அதில், சோமாலியாவில் நடந்த தாக்குதல் போல இந்தியாவில் தாக்குதல் நடக்காமல் தவிர்க்க பாதுகாப்புப் படைக்கு அறிவுறுத்தும் வகையில் வாட்ஸ்அப் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்துள்ள செய்தி எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும், இதுபற்றி விசாரணை செய்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். சோமாலியா தலைநகா் மொகடிஷுவில் கடந்த 21-ஆம் தேதி பிரபலமான விடுதிக்குள் நுழைந்து, அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் மும்பை போக்குவரத்து காவல் துறையின் வாட்ஸ் அப்பிற்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து எச்சரிக்கை குறுஞ்செய்தி, “26/11” பாணியில் பயங்கரவாத தாக்குதல் குறித்த செய்தி வந்தது. அதில் இந்தியாவில் ஆறு பேர் தாக்குதலை நிறைவேற்றுவார்கள் என அச்சுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

ஜெயலலிதா மரண விவகாரம்..! நாளை காலை 10.30 மணிக்கு இறுதி அறிக்கை..! பரபரப்பு தகவல்..!

Fri Aug 26 , 2022
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் நாளை காலை 10.30 மணிக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்ட 157 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் […]
’ஜெ. உடலுக்கு எம்பார்மிங் செய்தது மருத்துவரோ நர்ஸோ இல்லை’..!! இவர்கள்தான்..!! ஆறுமுகசாமி பரபரப்பு தகவல்

You May Like