கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட ஐந்து கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவாகும். இந்நிலையில், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கோதனல்லூர் பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளராக இருப்பவர் சூர்யபிரியா (24). மேலும் இவர் சித்திலஞ்சேரி பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கமிட்டி உறுப்பினராகவும் இருக்கின்றார்.
சூர்யபிரியா சித்திலஞ்சேரிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சூர்யபிரியாவும் அதேபகுதியை சேர்ந்த சுஜீஸ் (27) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை சூர்யபிரியா வீட்டிற்கு காதலன் சுஜீஸ் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சூர்யபிரியாவை சுஜீஸ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு, சுஜீஸ் அருகில் இருந்த காவல் நிலைய த்திற்கு சென்று தான் சூர்ய பிரியாவை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், சூர்யபிரியாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு சூர்யபிரியா பிணமாக கிடந்தார். இதை தொடர்ந்து, காவல்துறையினர் சூர்யபிரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் சுஜீசை கைது செய்து சிறையில் அடைத்தனர். சூர்யபிரியாவை அவரது காதலன் சுஜீஸ் கழுத்தை நெரித்து கொலை செய்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிர்வான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் சூர்யபிரியா, வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.