fbpx

பொதுமக்கள் விரும்பும் திட்ட பணிகளை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ள அழைப்பு விடுத்த சென்னை மாநகராட்சி…..!

தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள் குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி வழங்கினால் அரசின் சார்பாக கூடுதலாக 2 பங்கு நிதி வழங்கப்படும் அப்படி வழங்கப்பட்டு மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த விதத்தில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர் நிலைகளை புரனமைத்தல், செயற்கை நீரூற்றுகள் மற்றும் தெருவிளக்குகள் அமைப்பது, சிசிடிவி கேமராக்களை அமைத்தல், மரக்கன்று நடுதல், மழை நீர் வடிகால், சாலைகள், அமைத்தல், தூண்களில் வண்ண ஓவியங்கள் வரைதல், தெருக்களுக்கு பெயர் பலகைகள் வைத்தல், உள்ளிட்ட பல திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு பொதுமக்கள், நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளிட்ட ஒரு முன்வர கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

ஆகவே சென்னையில் நமக்கு நாமே திட்டத்தில் திடப்பணிகளை முன்னெடுக்க விருப்பமுள்ளவர்கள் தாங்கள் செயல்படுத்த நினைத்த திட்டத்தை தேர்வு செய்து மாநகராட்சி ஆணையர், இணை, துணை ஆணையர், மண்டல அலுவலர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்களை அனுகி கூறலாம். இதன் மூலமாக மக்கள் தங்கள் விரும்பும் திட்டங்களை செயல்படுத்தி பயனடையலாம் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை…..!

Tue May 2 , 2023
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. ஆகவே இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் […]

You May Like