விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அதே சமயத்தில் சன் டிவி தொடர்கள்தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறதாம், விஜய் டிவியில் முன்னணியில் இருந்து வரும் பாக்கியலட்சுமி தொடரே முதல் 5 இடத்தில் இருப்பது அரிதாகிவிட்டது போட்டியை சமாளிக்க விஜய் டிவி தொடர்ந்து புது புது தொடர்களை களம் இறக்கி வருகிறது.
இந்த சூழ்நிலையில், தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மௌன ராகம் 2 மற்றும் நம்ம வீட்டு பொண்ணு உள்ளிட்ட 2 சீரியல்கள் அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வர இருக்கின்றன மௌன ராகம் 2 கடைசி எபிசோட் மார்ச் மாதம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையும், நம்ம வீட்டுப் பொண்ணு கிளைமாக்ஸ் மார்ச் மாதம் 18ஆம் தேதியும் ஒளிபரப்பாக இருக்கின்றன.