வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் அடி பம்போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் வேலையாட்களை அனுப்பி அடி பம்பை அகற்றி விட்டு அந்த இடத்தில் கால்வாய் அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. பைக், ஜீப் போன்றவற்றை சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டதை தொடர்ந்து, அடிபம் போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது, வேலூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பணியை செய்த ஒப்பந்ததாரரின், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணியை வேலூர் கலாஸ்பாளையம், பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒப்பந்ததாரர் சுரேந்திர பாபு (49) மேற்கொண்டார்.
இந்நிலையில் அவர் மீது பொது சொத்தை சேதப்படுத்தியதக மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஒப்பந்ததாரர், சுரேந்திர பாபுவை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.