சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜீவால் எழும்பூரில் பத்திரிக்கையாளர்களை நேற்று சந்தித்தார். அதன் பிறகு கூடுதல் ஆணையர் லோகநாதன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது,, நாட்டிலேயே முதல்முறையாக சென்னை, அடையாறு, பெசண்ட் அவன்யூவில் ட்ரோன் காவல் அலகு என்ற திட்டம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று கூறியிருக்கிறார்.
ஏ என் பி ஆர் கேமராவுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட 9 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இவை தரையில் இருந்து 5 முதல் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பறக்க கூடியவை. இதன் மூலமாக திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு கூட்டத்தில் நடமாடும் பழைய குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்று கூறியிருக்கிறார்.
அதேபோல சைபர் குற்றவாளிகளை கண்டறிந்து சரியான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், இணைய வழி சைபர் புற்ற எச்சரிக்கை செயலி ஏற்படுத்தப்பட இருக்கிறது. பழைய குற்றவாளிகள் ரவுடிகளின் பதிவை டிஜிட்டல் மூலமாக உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது. திருட்டு வாகனத்தை அடையாளம் காணும் விதத்தில், ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கைபேசியில் தகவல் தெரிவிக்கும் அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது. அதோடு, கடற்கரையில் ரோந்து செல்ல பீச் பகி என்று சொல்லப்படும் அனைத்து நிலப்பரப்பிலும் செல்லும் வாகனங்கள் வாங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது என்று கூடுதல் ஆணையர் லோகநாதன் தெரிவித்திருக்கிறார்.