கடந்த 2 ஆண்டு காலமாக நோய் தொற்று பரவல் குறுக்கீடு காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறாமல் இருந்து வந்தனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சென்ற வருடம் அனைத்து தேர்வுகளும் நேரடி முறையில் நடைபெற்றது. அந்த வகையில் வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் ஆரம்பித்தாலும் கூட, செய்முறை தேர்வு எதிர்வரும் பிப்ரவரி மாதத்திலேயே ஆரம்பிக்க உள்ளது. ஆகவே அதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக ஹால் டிக்கெட் வழங்கும் பணியை வேகப்படுத்த அரசு தேர்வுகள் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 20223 ஆண்டு பொது தேர்வு கால அட்டவணை சென்ற நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக 25,76,332 மாணவ, மாணவிகள் இந்த பொது தேர்வை எழுத இருக்கிறார்கள் இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றனர். அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க அரசு தேர்வுகள் துறை திட்டமிட்டு இருக்கிறது.