தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் 2023- 24 ஆம் வருடத்திற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகின்றார். கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் டிஜிட்டல் நிதிநிலை அடிக்கடி வருகிறது அதன்படி இந்த ஆண்டும் டிஜிட்டல் முறையிலான நிதிநிலை அறிக்கையே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வி துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றிய நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித்துறையில் 1500 கோடி ரூபாய் செலவில் வரும் நிதி ஆண்டில் வகுப்பறைகள் கட்டிடங்கள் கட்டப்படும், எண்ணும், எழுத்தும் திட்டம் 110 கோடி ரூபாய் செலவில் விரிவு படுத்தப்படும் எனவும், எதிர்வரும் நிதியாண்டில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்தப்படும் என்றும் கூறினார்.
அத்தோடு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளி கல்வித்துறை எடுத்து நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளையும் பள்ளி கல்வித்துறைக்கு கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இனி அனைத்து துறைகள் நடத்தும் அனைத்து பள்ளிகளுமே பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்படும் எனவும் கூறினார்.