fbpx

புத்தாண்டில் நண்பர்களுடன் கும்மாளம் போட்ட கணவன்! தட்டிக்கேட்ட மனைவி படுகொலை!

பொதுவாக பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்தால் அது திருமணம் ஆனவர்கள் ஆனாலும் சரி திருமணம் ஆகாமல் இளைஞர்களாக இருப்பவர்களும் சரி அந்த பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடுவதற்கு தான் விரும்புவார்கள்.

அது நியாயமும் கூட. ஆனால் அந்த கொண்டாட்டம் எல்லை மீறினால் பல வகையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது.

அந்த வகையில், சென்னை தண்டையார்பேட்டையையடுத்த கருணாநிதி நகரில் வசித்து வந்தவர்கள். நந்தகுமார் பபிதா தம்பதியினர் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில் தான் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நந்தகுமார் மனைவி பபிதா மணலியில் இருக்கின்ற தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மனைவி பபிதா தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றதையடுத்து, நந்தகுமார் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து வீட்டில் மது உடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து ஜனவரி மாதம் 1ம் தேதி பபிதா மறுபடியும் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது வீட்டில் மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் என்று வீடு அலங்கோலமாக காட்சியளித்திருக்கிறது.

வீடு இப்படி அலங்கோலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி பபிதா தன்னுடைய கணவர் நந்தகுமாரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது. இந்த வாக்குவாதம் அதிகரிக்கவே, மது போதையின் உச்சத்தில் இருந்த நந்தகுமார் தன்னுடைய மனைவி பபிதா கழுத்தில் சேலையை வைத்து நெரித்து கட்டிலில் தூக்கி போட்டுவிட்டு மறுபடியும் உறங்குவதற்காக சென்றுவிட்டார்.

அந்த சமயத்தில் குழந்தைகள் இருவரும் தன்னுடைய தாயை எழுப்பி பார்த்து இருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய தாய் பேச்சு, மூச்சு இல்லாமல் மயக்கமுற்ற நிலையில் கிடந்திருக்கிறார். தங்களுடைய தாயின் இந்த நிலை தொடர்பாக போதையில் இருந்த தந்தை நந்தகுமாரிடம் குழந்தைகள் தெரிவித்து இருக்கின்றனர். உடனடியாக பதிலாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நந்தகுமார் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பபிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.

அத்துடன் பபிதாவின் கழுத்தில் இருந்த தடயங்களை வைத்து சந்தேகத்திற்குள்ளான மருத்துவர்கள். இது குறித்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் நந்தகுமாரிடம் நடத்திய விசாரணையில் நந்தகுமார் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார். அதன் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையிலடைத்தனர்..

Next Post

அட இன்னுமாப்பா இந்த கொடுமை எல்லாம் நடக்குது? கண்மாயில் குளிக்கச் சென்ற பட்டியல் இன பெண்களுக்கு ஏற்பட்ட துயர சம்பவம்!

Wed Jan 4 , 2023
நாடு அறிவியல் தொழில் நுட்பத்திலும் விண்வெளி ஆராய்ச்சியிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால் ஆசியாவில் மிக விரைவில் வல்லரசு நாடாக இந்தியா முடிசூட காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதோடு பெண்கள் சுதந்திரம், பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு என பேசி வருகிறார்கள் ஆனால் இவை அனைத்தும் வெறும் மேடைப்பேச்சுக்களாக மட்டுமே இருக்கின்றனவே தவிர நடைமுறைக்கு இதுவரையிலும் சாத்தியப்படவில்லை. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் […]

You May Like