கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் வெயில் தமிழக மக்களை சுட்டெரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் சென்னை கோவை சேலம் என்று பல்வேறு மாவட்டங்களில் தற்போது திடீரென்று ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இன்று காலையும் மழை பெய்ததன் காரணமாக, தலைநகர் சென்னையில் இன்று காலை இதமான சூழ்நிலை காணப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில், அடுத்த 3️ மணி நேரத்தில் சென்னையில் ஓரிரு பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி போன்ற 13 மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இதே போல மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.