fbpx

மகன் இறந்தது தெரியாமல்.. மகன் உடலுடன் வாழ்ந்த பரிதாப தாய் ..!

கோவையில் தற்கொலை செய்த இறந்து போன மகன் உடலுடன் மூன்று நாட்கள் வயதான தாய் இருந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆவாரம்பாளையம் வள்ளி நகரில் குடியிருப்பவர் சிபி சுப்பிரமணியம் (43). இவரது தாயார் வசந்தா (68). இவர் மனநலம் குன்றியவர் அதுமட்டுமல்லாமல் நடக்க முடியாமல் இருக்கிறார். சுப்பிரமணியத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் சிபி சுப்பிரமணியம் தனது தாயாரை கவனித்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வந்தது. மேலும் சுப்ரமணியத்தின் வீட்டு கதவு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்தில் உள்ளவர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு சிபி சுப்பிரமணியம் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவர் இறந்து மூன்று நாட்கள் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர் அதன் பிறகு அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், அவரது தாய் வசந்தா வேறொரு அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று நாட்களாக அவர் சாப்பிடாமல் இருந்தால் மயங்கியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். காவல் துறை விசாரணையில் இதுபற்றி காவல்துறையினர் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட சிபி சுப்பிரமணியத்தின் தாயார் வசந்தா உடல்நிலை சரியில்லாமல், நடக்க முடியாமல் இருந்ததால் மகன் இறந்தது தெரியாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு மூன்று நாட்களாக உணவு கிடைக்காததால் மயக்கமாகியுள்ளார். அவரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினர். இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிபி சுப்பிரமணியம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்தது கூட தெரியாமல் பிணத்துடன் அவரது தாய் ஒரே வீட்டில் இருந்த சம்பவம் கோவையில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது

Rupa

Next Post

அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் 11 எம்.பிக்கள் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம்.. சபாநாயகர் உத்தரவு..

Tue Jul 26 , 2022
நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதற்காக 11 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்க்ள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.. இதனால் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளுமே கடந்த வாரம் முழுவதுமே முடங்கின.. இந்நிலையில் இன்று மாநிலங்களவை கூடிய போது, “ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று […]
”இந்திய ராணுவத்தில் ஒரு லட்சம் காலியிடங்கள்”..! மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல்..!

You May Like