fbpx

வேலைக்கு சென்று திரும்பும் வழியில்…. கழுத்தறுத்து படுகொலை… போலீசார் விசாரணை..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் உள்ள கள்ளிவேளிபட்டி ஊராட்சி, கம்மாபட்டியில் வசிக்கும் கர்ணன் மகன் பொன்மணி (25). இவர் தனிச்சியம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். இவருக்கு கல்யாணமாகி ஆறு மாதம் ஆகிறது. நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு பொன்மணி தனது பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வீட்டின் அருகில் இருக்கும் சாலையில் கழுத்து அறுபட்ட நிலையில் தலையில் வெட்டு காயங்களுடன் பொண்மணி சடலமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பொன்மணி சடலமாக கிடந்ததை பார்த்து உடனடியாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான காவலர்கள் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சமயநல்லூர் சரக டிஎஸ்பி பாலசுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது, மேலும் தடையவியல் நிபுணர்களும் வந்து, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. முன்விரோதம் ஏதாவது உள்ளதா என கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

வங்கியில் இருந்து எடுத்த 2 லட்ச ரூபாய் பறிகொடுத்த முதியவர்.. ஸ்மார்டாக கொள்ளையடித்த திருடன்..!!

Sat Sep 17 , 2022
திருவண்ணாமலை வேலூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (60). இவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் ஆவார். கிருஷ்ணமூர்த்தி நேற்று பிற்பகல் அவரது தேவைக்காக வேலூர் மெயின் ரோட்டில் இருக்கும் கார்ப்பரேஷன் வங்கியிலிருந்து இரண்டு லட்ச ரூபாயை எடுத்துள்ளார். பணத்தை எடுத்து கொண்டு வங்கியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் உங்களுடைய பணம் கீழே விழுந்து விட்டது என கூறியுள்ளார். […]

You May Like