fbpx

உங்கள் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கிறதா…..! வந்தது அதிரடி அறிவிப்பு….!

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் மின்சார வாரியத்திற்கு ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. அந்த அறிவுறுத்தலின்படி ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரே மின் இணைப்பு மட்டுமே கொடுக்க வேண்டும். ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை முறையாக நோட்டீஸ் கொடுத்து கட்டண விகிதப்பட்டியல் படி 1 ஏயில் ஒரே மின் இணைப்பாக இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நுகர்வோர் இணைப்பதற்கு முன் வராவிட்டால் அதனை 1 டி கட்டண விகித பட்டியலாக மாற்ற வேண்டும். அத்துடன் மின்சார வாரியம் மின் இணைப்பு கொடுக்க அந்த பகுதி வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு சிலர் ஒரே வீட்டில் தனித்தனி குடும்பமாக வாழ்கிறார்கள். அங்கே வாடகை ஒப்பந்தமோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக, இது போன்ற குடும்பங்கள் இருக்கின்ற குடியிருப்பில் மற்றொரு கூடுதல் மின் இணைப்பு பெறப்பட்டிருந்தால் அங்கே தனி ரேஷன் அட்டை இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் இதன் நோக்கம் என்னவென்றால் 100 யூனிட் மானிய மின்சாரம் என்பது முறையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்று கூறப்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1 டி கட்டண விகித பட்டியலாக மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் இருக்கின்ற வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக இருக்கின்ற மின்சார இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும். அல்லது அவை 1 டி கட்டண விகிதம் பட்டியலாக மாற்றப்பட வேண்டும்.

அதாவது ,ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1-ஏ கட்டண விகித பட்டியலாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தெளிவாக ஆய்வு செய்து அறியப்பட்டு அதன் பிறகு அமல்படுத்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Next Post

வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய விவகாரம்.. பீகாரை சேர்ந்த நபர் தெலங்கானாவில் கைது..

Tue Mar 7 , 2023
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வதந்தி பரவியது. இதுதொடர்பாக பல்வேறு போலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் […]
ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

You May Like