சென்ற வருடம் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு கூடியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். அதனை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிற்கும் விதமாக பன்னீர்செல்வம், வைரமுத்து உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் ஜூலை 11ஆம் தேதி கொட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அதன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிடவில்லை எனவும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே இதற்கான முடிவை மேற்கொள்ளும் என்றும் தெளிவுபடுத்தி இருந்தது.
இந்த சூழ்நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியைச் சார்ந்த ஆலங்குளம் சட்டசபை தொகுதி உறுப்பினரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
அந்த மனதில் சென்ற வருடம் ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் ஜே சி டி பிரபாகர் வைத்திலிங்கம் மற்றும் தன்னையும் கட்சியிலிருந்து நீக்கியும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.