fbpx

அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் வாய்ப்பு…..! வானிலை ஆய்வு மையம் அலார்ட்…….!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், வங்க கடல் பகுதியில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும் என்றும் அது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக, இன்று முதல் வரும் 10ம் தேதி வரையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசலாம் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஏற்படும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக உருமாறும். ஆகவே பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

’லியோ படத்தில் என்னுடைய கேரக்டர் இதுதான்’..!! உண்மையை போட்டுடைத்த கௌதம் மேனன்..!!

Sun May 7 , 2023
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது முழுவதும் நடிகராக மாறியுள்ளார். கடந்தாண்டு செல்ஃபி, எஃப்ஐஆர், சீதா ராமம் போன்ற படங்கள் வெளியாகியிருந்தன. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் முக்கியமான வேடத்தில் கௌதம் மேனன் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கௌதம் மேனன் பேசியிருந்தார். அதில், ”லோகேஷ் […]
’லியோ படத்தில் என்னுடைய கேரக்டர் இதுதான்’..!! உண்மையை போட்டுடைத்த கௌதம் மேனன்..!!

You May Like