fbpx

அரசு போக்குவரத்து விரைவு பேருந்துகளில்… பார்சல் சேவை வரும் 3-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது..!

வருகிற 3- ஆம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை நடைமுறைக்கு வருகிறது என்று போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் குறுகிய இடைவெளியில், குறைந்த நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் தயாரிக்கப்படும் பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்காக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகளின் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.

குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறுகிய நேரத்தில் அனுப்புவதற்கு தகுந்த முறையில் வணிகர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மற்றும் அவர்களின் முகவர்கள், தினமும் அனுப்ப வேண்டிய பொருட்களை இரண்டு ஊர்களுக்கு இடையே அனுப்பும் வகையில் பார்சல் சேவை அறிமுகமாகிறது. இது வருகின்ற ஆகஸ்டு 3-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாதம் முழுவதும் பேருந்துகளில் உள்ள சரக்கு வைக்கப்படும் பெட்டிகளை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி உபயோகித்து கொள்ளலாம்.

சரக்கு பெட்டிகளில் புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய், திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோவில் நேந்திரம் பழம் சிப்ஸ் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பலவகையான பிரபலமான பொருட்கள் அனைத்தையும் எளிதாக அனுப்பலாம். சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கு அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம். பிற ஊர்களிலில் இருந்து சென்னைக்கு 80 கிலோ எடையுள்ள பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி (331 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, மதுரை (459 கிலோ மீட்டர்) தினசரி ரூ.300, மாதம் ரூ.9 ஆயிரம், கோவை (510 கிலோ மீட்டர்) தினசரி ரூ.330, மாதம் ரூ.9 ஆயிரத்து 900, சேலம் (341 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நெல்லை (622 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, தூத்துக்குடி (601 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, செங்கோட்டை (645 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, நாகர்கோவில் (698 கிலோ மீட்டர்) தினசரி ரூ.420, மாதம் ரூ.12 ஆயிரத்து 600. கன்னியாகுமரி (740 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, மார்த்தாண்டம் (728 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி (428 கிலோ மீட்டர்) தினசரி ரூ.270, மாதம் ரூ.8 ஆயிரத்து 100, ஓசூர் (317 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நாகப்பட்டினம் (353 கிலோ மீட்டர்) தினசரி ரூ.240, மாதம் ரூ.7 ஆயிரத்து 200 இவ்வாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Baskar

Next Post

உங்களால் முடியுமா?.. தன்னுடைய 13 பற்களை தானே பிடுங்கிய பெண்..!

Sun Jul 24 , 2022
இங்கிலாந்தை சேர்ந்தவர் டேனிலி வாட்ஸ் (42). இவருக்கு நீண்ட காலமாக பல் ஈறுகளில் வலி இருந்துள்ளது. உள்ளூரில் இருந்த பல் மருத்துவமனையும் ஏழு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. இதனால் அவரால் உடனடியாக சிகிச்சை பெற முடியவில்லை. மேலும் வெளியூர் சென்று சிகிச்சை பெறவும் அவருக்கு வசதியில்லை. இதனால் என்ன செய்வது தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் வாட்ஸ். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பல் ஈறுகளில் மிகவும் கடுமையான […]

You May Like