தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. ஆகவே தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில்தான் கோவை, நீலகிரி போன்ற 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. அதேபோல திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
.