fbpx

ஆதார் தகவல்களை சரி பார்க்க தனியாருக்கு அனுமதிக்க திட்டம்…,! மத்திய அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு…….!

ஆதார் எண் என்பது இந்திய குடிமக்களின் தனிப்பட்ட அடையாளமாக பார்க்கப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளும் இந்த ஆதார் என்னை மையமாகக் கொண்டே இருக்கிறது. இந்த ஆதார் எண்ணில் இருக்கக்கூடிய அனைத்து தகவல்களும் மிகவும் பாதுகாப்பானவை என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதுவரையில் இந்த ஆதார் சேவை மையங்களை மத்திய அரசே ஏற்று நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த ஆதார் தரவுகளை சரி பார்க்கும் ஒரு பை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஆதார் அடையாள அட்டையில் அதற்கு மக்கள் வழங்கும் தரவுகள் மற்றும் தகவல்களை சரி பார்க்கும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் விதமாக ஆதார் விதிகளில் மாற்றம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அரசன் சேவைகள் சென்று சேர்வதை எளிதாக்குவதற்காக இந்த மாற்றம் கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய அரசு சார்பாக கூறப்பட்டுள்ளது.

Next Post

அமெரிக்க ஏரியில் மிதந்த இந்தியரின் உடல்…..! தற்கொலையா அல்லது கொலையா காவல் துறையினர் தீவிர விசாரணை……!

Fri Apr 21 , 2023
இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அங்கித் பங்காய் என்பவர் அமெரிக்காவில் மேரி லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்று கூறப்படுகிறது. இவர் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 9ம் தேதி இவர் மருத்துவமனைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திருப்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாததால் அவருடைய குடும்பத்தைச் […]

You May Like