fbpx

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட பயிற்சியாளர் !போக்சோவில் கைது செய்த போலீஸ்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரயில் நிலையம், பேருந்து நிலையம், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவை அதிகமாக இருந்து வந்தனர்.

ஆனால் தற்சமயம் குழந்தைகள் கோவிலாக நினைத்து செல்லும் பள்ளிகளில் கூட பாலியல் தொந்தரவுகள் பாலியல் வன்கொடுமை உழைத்தவைகள் அதிகரிக்க தொடங்கி விட்டனர் அதுவும் பள்ளியில் மாணவ, மாணவிகள் தங்களுடைய குருவாகப் பார்க்கும் ஆசிரியர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் சில பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக விளையாட்டு பயிற்சியாளர் மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி உள்ளிட்டோர் போகோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு தங்கும் விடுதியில் தங்கி டேக்வாண்டோ பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவிகள் சில பேரிடம் பயிற்சியாளர் தர்மராஜன் சென்ற சில மாதங்களாகவே ஆபாசமாக பேசுவது, பாலியல் ரீதியிலான சீண்டலில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழ தொடங்கியது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், மாவட்ட விளையாட்டு அதிகாரி சுரேஷிடம் புகார் வழங்கியும் அவர் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு கடந்த நவம்பர் மாதம் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் மற்றும் குழந்தைகள் நல குழுவினர் சென்ற 2ம் தேதி விளையாட்டு விடுதிக்கு நேரில் சென்று இது தொடர்பாக விசாரித்து இருக்கிறார்கள்.

இந்த விசாரணையை தொடர்ந்து கடந்த 7ம் தேதி கோபிநாத் வழங்கிய புகாரின் அடிப்படையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாக தர்மராஜன், மாணவிகள் வழங்கிய புகாரின் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ளாத சுரேஷ் உள்ளிட்டோர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வடக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஒரு வார காலம் கடந்துவிட்ட பின்னரும் கூட, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் கைது செய்யாததை கண்டிக்கும் விதமாகவும், உடனடியாக கைது செய்ய கோரியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் கல்யாணி தலைமையில் பெண்கள் நேற்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து மனு வழங்கினர்.

இதற்கு நடுவே மாணவிகள் வழங்கிய புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள தவறிய பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி சுரேஷை பணியிடை நீக்கம் செய்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்

Next Post

இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தைக்கூறி பழகிய இளைஞர்கள்! இறுதியில் நேர்ந்ததைப்பாருங்க!

Fri Dec 16 , 2022
தற்போது இளம் பெண்கள் எந்த விஷயத்திலும் அதிக கவனத்துடன் இருப்பதில்லை. எதிலும் ஏனோ, தானோ என்று எந்த விஷயமாக இருந்தாலும் செய்து முடித்து விடுகிறார்கள். ஆனால் அதன் பின்விளைவு மிகவும் மோசமாக இருக்கிறது. அந்த விதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமாகி வெளிநாட்டிலிருந்து இலவசமாக பரிசு பொருட்களை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் தெரிவித்து, நம்ப வைத்து 10 […]

You May Like