தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருடம் தோறும் வேஷ்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும். அத்துடன் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி , முந்திரி, திராட்சை போன்ற பொருட்களுடன் கரும்பு உள்ளிட்டவையும் வழங்கப்படும்.
இந்த நிலையில் தான் சென்று வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்தை தவிர்த்து 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது.
ஆனால் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக அறிவதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அத்துடன் கடந்த வருடத்தை போலவே பொருட்கள் மட்டும்தான் வழங்கப்படுமா? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது.
ஆனால் திமுக அரசின் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது செயல்முறைக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த தமிழக நிதிநிலை அறிக்கையின்போது தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைகள் கணக்கிடும் பணி ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார். அந்த பணிகள் மிக விரைவில் முடிவடைந்து தகுதியுள்ள ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்முறைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.
தற்சமயம் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். அத்துடன், சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் உள்ளிட்ட துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக பொங்கல் பரிசுத்தப்புடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் செயல்பாட்டிற்கு வரலாம் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
பொங்கல் பரிசுத் தொகை 1000 ரூபாய், அதே போல பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை என்று இரட்டைப் பரிசுத்தொகை வரும் பொங்கலில் காத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான தகவலால் தமிழக குடும்பத்தலைவிகள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரையில் வெளியாகாத நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்று எல்லோரும் எதிர்பார்க்கப்படுகிறது.