fbpx

2023 பொங்கல் பரிசுத்தொகுப்பு : இன்று முதல் வீடு தேடி வரும் டோக்கன்.!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு முழுவதும் வருடம் தோறும் பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

அதனைப் பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி கொண்டாடுவதற்காக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் சார்பாக பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் இவற்றுடன் 2500 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

ஆனால் சென்ற வருடம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது ஆகவே சென்ற வருடம் ரொக்க பணத்தை தவிர்த்து 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்த குப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டது. ஆனால் சென்ற வருடம் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த கரும்பு இந்த வருடம் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் தான் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் 1000 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்போடு வழங்கப்படும் ரொக்கபணம் தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. 1000 ரூபாய் ரொக்க பணம் பெறுவதற்கான டோக்கன் இன்றும், நாளையும் விநியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 1000 ரூபாய் வழங்குவதை வருகின்ற ஜனவரி மாதம் 2ம் தேதி சென்னையில் முதல்வரும், தமிழகத்தில் இருக்கின்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

2023னை வரவேற்கும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tue Dec 27 , 2022
தமிழ்நாட்டில் நேற்று குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்தது. அதோடு குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான்று முதல் […]

You May Like