இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களே சேர்ந்து நடித்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியை சந்தித்த நிலையில், நேற்று இந்த திரைப்படத்தின் 2வது பாகம் வெளியானது.
முதல் ஷோவில் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படத்தின் வெற்றிப் பாதை பிரகாசமாக இருக்கிறது. திரைப்படம் சற்றே மெதுவாக சென்றாலும் நன்றாக இருக்கிறது என்று மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி தமிழகத்தில் முதல் நாள் மட்டுமே இந்த திரைப்படம் 20 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்திருக்கிறது. தமிழகத்தில் இது பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு என்று கூறப்படுகிறது.