காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த காதலை வெறும் கமிட்மெண்டாக மட்டுமே பார்க்காமல் அந்த காதலை ஒரு பொறுப்பாக பார்த்தால் ஆண், பெண் என்று இருபாலருமே காதலிக்கும் போது தவறு செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.
ஆனால் காதலுக்கு கண் இல்லை என்று சொல்வதைப் போல காதலிக்கும் இளம் ஜோடிகள் ஏதேதோ செய்து விடுகிறார்கள். அவர்கள் செய்த செயல் பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய துன்பமாக வந்து நின்று விடுகிறது.காதலில் ஆண், பெண் என இரு பாலரும் உண்மையாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் போராடி வெற்றி பெறுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
திருவாரூர் வட்டம் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் நரேஷ்குமார்( 24). இவர் இளங்கலை பட்டப்படிப்பு படித்துவிட்டு திருவாரூரில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் சுஷ்மிதா (21) என்ற பெண்ணுக்கும் கல்லூரி படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.அத்துடன் சுஷ்மிதாவின் பெரியம்மா வீடு நரேஷ்குமாரின் வீட்டின் அருகே இருப்பதால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.
சென்ற 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது சுஷ்மிதா இளங்கலை வரலாறு படித்து விட்டு தற்சமயம் பி எட் படித்து வந்தார். இந்த நிலைகள் தான் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததனால் சுஷ்மிதா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த விவகாரம் சுஷ்மிதாவின் வீட்டிற்கு தெரிய வந்தவுடன் சுஷ்மிதாவின் வீட்டில் இருப்பவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர் இதனை தொடர்ந்து ஊர் பஞ்சாயத்தில் பேசி காதலர்கள் இருவரையும் மாலை மாற்றி கொள்ள வைத்தனர். இதனைத் தொடர்ந்து, வரும் 12ஆம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்றும் ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆகவே சுஷ்மிதா நரேஷ்குமாரின் வீட்டில் கடந்த ஒன்றரை மாதமாக தங்கி இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் 3 நாட்களில் திருமணம் நடைபெற இருப்பதால் திருமணத்திற்கு தேவைப்படும் துணி மற்றும் தாலி போன்ற பொருட்களை வாங்குவதற்காக நரேஷ்குமாரின் தாய் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் திருவாரூருக்கு சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த சுஷ்மிதா வீட்டிற்கு பின்புறம் இருக்கின்ற கூரை கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த நரேஷ்குமார் கதறி அழுததால், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சுஷ்மிதாவை மீட்டு உள்ளனர், இதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆகவே கொரடாச்சேரி காவல்துறையினர் சுஷ்மிதாவின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அதனை தொடர்ந்து சுஷ்மிதாவின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்று பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் நரேஷ்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 தினங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் பெண்ணின் பெற்றோர் கதறி அழுத சம்பவமும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.