கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள நாவலூர் கிராமத்தில் குடியிருப்பவர் காவேரி. இவரது கணவர் இறந்து விட்டதால் காவேரி பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவரது கணவரின் சகோதர, சகோதரிக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சனை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் காவிரியின் கணவரின் தம்பி சுப்பிரமணியனுக்கும், காவிரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு கைகளப்பாக மாறியதால் காவிரியை அங்கிருந்த அரிவாள்மனையால் சுப்பிரமணியன் வெட்டியதில், தலை மற்றும் கையில் காவிரிக்கு படுகாயம் ஏற்பட்டது. எனவே அவரை அருகில் உள்ள வேப்பூர் மாற்றம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் காவேரி ஆபத்தான நிலையில் உள்ளதால், தற்போது பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒருவர் சுப்பிரமணியன் தனது அண்ணி காவிரியை அரிவாள்மணியால் வெட்டுவதை அவரது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.