மாபெரும் எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் உண்மையும், கல்கியின் சில கற்பனைகளும் கலந்து சோழர்களின் வரலாறு பொன்னியின் செல்வன் என்ற பெயரில் 5 பாகங்களாக எழுதப்பட்டது. இந்த பொன்னியின் செல்வன் நாவலை படித்த பல பிரபலங்கள் மற்றும் திரைத்துறை கலைஞர்கள் எல்லோரும் நிச்சயமாக இந்த நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள்.
எம்ஜிஆர் காலம் தொட்டே இந்த முயற்சி தொடங்கப்பட்டது. அதாவது எம்ஜிஆரை வைத்து இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றனர். அதன் பிறகு அது முடியாமல் போயிட்டு அதன் பின்னரும் இந்த நாவலை படமாக எடுப்பதற்கு பல இயக்குனர்கள் முடிவு செய்தார்கள்.
அதுவும் முடியாமல் போய்விட்டது. ஆனால் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இந்த பொன்னியின் செல்வன் நாவல் 2 பாகங்களாக திரைப்படமாக உருவெடுத்துள்ளது.. அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாகம்-1 சென்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியானது மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் பிரகாஷ்ராஜ், திரிஷா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளங்களே இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு twitter மூலமாக தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் அந்த கருத்துக்களை தற்போது நாம் காணலாம்.