fbpx

நண்பனை தூங்க வைத்து; தலையில் கல்லை தூக்கி போட்ட கொடூர செயல்..?

சென்னை அருகே பல்லாவரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை (29). இவர் பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. சின்னதுரைக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது சின்னதுரை மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். தினமும் பகலில் வேலைக்கு செல்லும் சின்னதுரை, இரவில் பம்மல் பிரதான சாலையில் உள்ள நடைபாதையில் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அதே இடத்தில் படுத்து உறங்கும் மதுரையைச் சேர்ந்த ராஜா(44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் சேர்ந்து அமர்ந்து மது குடித்தனர். திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது, வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரம் அடைந்த ராஜா, நண்பர் சின்னதுரையை தீர்த்துக்கட்ட முடிவு எடுத்தார். எனவே சின்னதுரை தூங்கும் வரை காத்திருந்தார் ராஜா. அதன்படி நள்ளிரவில் சின்னதுரை தூங்கியதும், ராஜா அருகில் கிடந்த பெரிய கல்லை தூக்கி சின்னதுரையின் தலையில் போட்டார். இதில் சின்னதுரை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், சின்னதுரை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பல்லாவரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், இறந்து கிடந்த சின்னதுரை உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

’அவர் எந்த கட்சி என்றே எங்களுக்கு தெரியாது’..! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Mon Aug 1 , 2022
தேர்தல் ஆணையக் கூட்டத்தில் கோவை செல்வராஜ் எந்த கட்சி சார்பில் பங்கேற்றார் என்பதை தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் […]
’அதிமுக உட்கட்சி பிரச்சனை குறித்து தலைமை தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்கும்’..! - சத்யபிரதா சாகு

You May Like