தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மழைக்காலம் முடிவடைந்து பனிக்காலம் தொடர்ந்தது. இந்த பனிக்காலம் தற்போது வரையில் நீடித்து வருகிறது. ஆனாலும் அப்போது தமிழகத்தில் பரவலாக மழையும் பெய்து வருகிறது.
அந்த வகையில், கடந்த சில தினங்களாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நெற்ப்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த சமயத்தில் மழை பெய்ததன் காரணமாக, விவசாயிகள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த செய்தி குறிப்பில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.