கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா, அம்மன் கோவில் வாசலிலே என பல்வேறு திரைப்படங்களின் மூலமாக ரசிகர்களிடையே முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை அவரே இயக்கியும் இருக்கின்றார்.
கடந்த பல வருடங்களாக திரையுலகில் இருந்து விலகி இருந்த அவர் தற்சமயம் சாமானியன் என்ற திரைப்படத்தின் மூலமாக மறுபடியும் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், முதல் முறையாக நடிகர் ராமராஜன் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமராஜன் வருகை தந்திருக்கிறார் அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.