நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் தற்பொழுதுஇணையத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் ரன்வீர் சிங் பாலிவுட்டின் பிரபலமான நடிகர். ஆது மட்டுமல்லாமல் நடிகை தீபிகா படுகோனேவின் கணவர். ரன்வீர் சிங் எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவார். அதே நேரம் பொதுவெளியில் வரும்போது அவருடைய வித்தியாசமான ஆடை அலங்காரம் மற்றும் கெட்டப் புதுமையாக இருக்கும். இதற்காகவே அவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
மற்றவர்களைப் பற்றி எனக்கு என்ன கவலை என்று தனக்கு பிடித்ததை செய்யக் கூடியவர். இந்த சூழலில் தான் ரன்வீர் சிங் ஆடை இல்லாமல் நிர்வாணமாகக் போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகின்றன.
இது தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும் குதூகலத்துடன் இந்தப் புகைப்படங்களை வைத்து தங்கள் கிரியேட்டிவிட்டியை வெளிபடுத்தி வருகின்றனர்.