தற்போதைய இளம் தலைமுறையினருக்கு சமூகத்தில் பொறுப்பில்லை என்று பலவாறு பலர் குறை கூறி வருகிறார்கள். ஆனால் இளம் சமுதாயம் அணைத்தால் இந்த சாதனையையும் நிவர்த்தி காட்ட முடியும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தெரிவித்ததை தற்போதைய இளம் தலைமுறையினர் மெய்ப்பித்து கட்டி வருகிறார்.
அந்த வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்கள் ஒன்றிணைந்து ஹைட்ரிட் வகை ராக்கெட் ஒன்றை தயாரித்தார்கள். அதோடு, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 5 ஆயிரம் மாணவர்கள் ஒன்றிணைந்து 150 சிறிய pico ரக செயற்கைக்கோள்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் 2000 அரசு பள்ளி மாணவர்களும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோள்களும் ஹைபிரிட் ராக்கெட் மூலமாக மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் இருந்து விண்ணில் ஏவப்பட்டனர்.
குறைந்த தூரத்தில் நிலைநிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் மூலமாக வானிலை கதிர்வீச்சு தன்மை உள்ளிட்டவற்றின் தரவுகளை பெற இயலும் என்று கூறப்பட்டிருக்கிறது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தபோது தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கால் தவறி கீழே விழுந்தார்.அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் காரணமாக, உறங்காமல் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.