fbpx

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்; அடுத்த தேர்தல் வரையில் அது வாக்குறுதியாகவே இருக்குமா?: மக்கள் நீதி மய்யம் கேள்வி..!

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ. 10,696 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறையை தன்வசம் வைத்திருக்கும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், எந்தவிதமான அரசு உதவி தொகையும் பெறாத 21 முதல் 57 வயது வரையிலான வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவியாக அளிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க, வாக்குறுதியை நிறைவேற்றாமலும், பிடிகொடுக்காமலும் இருப்பது ஏற்புடையதல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென நாட்டிலேயே முதன்முதலில் குரல் கொடுத்தவர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன்.

பல்வேறு மாநில அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தைக் கையில் எடுத்தன. இந்நிலையில், ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று நேற்று தாக்கல் செய்யப்பட்ட புதுச்சேரி நிதிநிலை அறிக்கையில், அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதுடன், புதுச்சேரி அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.

அதேசமயம், இந்த திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த தி.மு.க, இன்னமும் பிடிகொடுக்காமல் உள்ளது ஏற்புடையதல்ல. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்  என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் பதிவிடப்பட்டுள்ளது.

Baskar

Next Post

அரசாங்கம் என்பது கார்பரேட் நிறுவனம் அல்ல என்பதை அண்ணாமலை உணர வேண்டும்: கனிமொழி அதிரடி..!

Tue Aug 23 , 2022
நலத் திட்டங்கள் என்பது வேறு, இலவசங்கள் என்பது வேறு, இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தி.மு.க அறிவித்த 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், பாதிக்கும் மேற்பட்டவை தேவையில்லாத இலவசங்கள் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இலவசங்களையும், அரசின் கடமைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார். அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டிற்கு […]

You May Like