சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு உச்ச நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 45 இடங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊர்வலம் நடத்தலாம் என்று தமிழக காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது இந்த நிலையில் 12 மிக கடுமையான நிபந்தனைகளும் இந்த ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஊர்வலத்தின் போது மற்ற மதங்கள் குறித்து தவறாக பேசக்கூடாது எனவும் லத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது அதே போன்று ஊர்வலத்தையடுத்து பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கின்ற நிலையில், அந்த பகுதிகளில் மிக பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
.